திரும்பிப்பார், நிமிர்ந்து நில்! - பகுதி II

திரும்பிப்பார், நிமிர்ந்து நில்! 

(நூற்றாண்டை கடக்கும் சுயமரியாதை, சமூகநீதி இயக்கம்)

பதிவு 1

பெரியாருக்கு யுனெஸ்கோவின் பாராட்டு:


ஜூன் 27 1970ம் ஆண்டு ஐ.நா வின் நிறுவனமான யுனெஸ்கோ பெரியாருக்கு கீழ்க்கண்டவாறு பாராட்டு தெரிவித்தது

(மொழிபெயர்ப்பு)

"பெரியார்,
புதுயகத்தின் பிதாமகன்,
தென்கிழக்கு ஆசியாவின் சாக்ரடீஸ்,
சமூக சீர்திருத்த இயக்கத்தின் தந்தை,
அறியாமை, மூடநம்பிக்கை மற்றும் அர்த்தமற்ற பழக்க வழக்கங்களின் பரம எதிரி!"

The UNESCO, an international organisation of the United Nations, conferred on Periyar a glorious title the citation of which reads as "Periyar the prophet of New Age, Socrates of South East Asia, Father of the social Reform Movement, and Arch enemy of ignorance, superstitions, meaningless customs and base manners"
- UNESCO 27-6-1970

பதிவு 2


அனைவருக்கும் மருத்துவக்கல்வி (சமூகநீதி):


சமக்கிருத தேர்ச்சி பெற்றவர்களே மருத்துவக்கல்லூரியில் சேர தகுதியானவர் என்ற அவலம் தமிழகத்தில் இருந்தது!  (100% இட ஒதுக்கீடு!)

1920 இல் நீதிக்கட்சி ஆட்சி அமைத்தவுடன் மருத்துவக்கல்விக்கு சமக்கிருத தேர்ச்சி தேவையில்லை என்ற ஆணை பிறப்பித்தது.

இதுவே கல்வியில் 
அயல் மொழி ஆதிக்கத்திற்கு எதிராக பாய்ந்த முதல் அம்பு!
அடைத்த கதவுகளை அனைவருக்கும்
அகலத்திறந்த பேரன்பு!



Comments

Popular posts from this blog

திரும்பிப்பார், நிமிர்ந்து நில்! - பகுதி I

MySchoolMemoirs: The Sweet Souvenir