திரும்பிப்பார், நிமிர்ந்து நில்! - பகுதி I

திரும்பிப்பார், நிமிர்ந்து நில்! 

(நூற்றாண்டை கடக்கும் சுயமரியாதை, சமூகநீதி இயக்கம்)

பதிவு 1

சத்துணவு திட்டம் (சமூக நீதி):

1923 இல் நீதிக்கட்சியாலும், பிறகு 1955 இல் காமராஜராலும் துவங்கப்பட்ட மதிய உணவு திட்டம், செப். 15 1982 இல் சத்துணவு திட்டமாக எம். ஜி. ஆரால் அறிமுகபடுத்தபட்டது. மைய அரசின் நிதி அளிக்காத போக்கையும், விமர்சனங்களையும் கடந்து 5 ஆண்டுகளில் உலக வங்கியின் பாராட்டை பெற்றது. 
தமிழகத்தை பின்பற்றி இத்திட்டத்தை மைய அரசு நாடெங்கிலும் 2002 இல் அமலாக்கியது!

பதிவு 2

சீர்திருத்த திருமணம் (சுயமரியாதை):

மந்திரச் சடங்குகள் ஏதுமில்லா இந்து முறை திருமணங்களுக்கு சட்ட அங்கீகாரம் அளித்த முதல் மற்றும் ஒரே மாநிலம் தமிழகம்.
மார்ச் 6 ஆம் தேதி 1967 இல் தி.மு.க ஆட்சி அமைத்தவுடன் அன்றைய முதல்வர் அறிஞர் அண்ணா கையெழுத்திட்ட முதல் ஆணை!பதிவு 3

நெருக்கடி நிலைக்கு எதிரான தீர்மானம் (சுயமரியாதை):

ஆட்சி அகற்றப்படும் என்று தெரிந்தும் நெருக்கடி நிலைக்கு எதிரான தீர்மானம் நிறைவேற்றிய ஒரே மாநிலம் தமிழகம்!

ஜூன மாதம்் 27 ஆம் நாள் 1975 இல் நெருக்கடி நிலைக்கு எதிரான பல தீர்மானங்களை செயர்க்குழு கூட்டி நிறைவேற்றினார் அன்றைய முதல்வர் கலைஞர் கருணாநிதி.

இந்தியாவின் ஜனநாயக தீவாய் திகழ்ந்தது தமிழகம்!


பதிவு 4

பெண்களுக்கு சொத்தில் சமவுரிமை(சமூக நீதி: பெண்ணுரிமை)

மார்ச் மாதம் 25 ஆம் நாள் 1989  முதல் பெண்களுக்கு சொத்தில் சமவுரிமை வழங்கும் சட்டதிருத்தம் - இந்து சொத்துரிமை சட்டம் 1956   பிரிவு 6 இல் இருந்த பாலின வேறுபாட்டை அகற்றி- அன்றைய முதல்வர் கலைஞர் கருணாநிதியால் நிறைவேற்றப்பட்டு, ஜனவரி 15 1990 இல் குடியரசு தலைவரின் ஒப்புதலை பெற்றது.
இந்திய அரசு இந்த சட்ட திருத்தத்தை 16 வருடம் கழித்து 2005 இல் நிறைவேற்றியது!


பதிவு 5

மாநில சுயாட்சி: (சுயமரியாதை- முன்னோடி மாநிலம்)

மாநில சுயாட்சி மற்றும் மத்திய மாநில அரசுகளின் உறவு மேம்பாடு குறித்து பரிந்துரைகள் அளிக்க, செப் 1969 இல் முனைவர், நீதியரசர் ராஜமன்னார் அவர்களின் தலைமையில் மூவர் குழுவை அமைத்தார் அன்றைய முதல்வர் கலைஞர் கருணாநிதி. மே 27 1971 இல் இக்குழு தன் பரிந்துரைகளை சமர்பித்தது.
மத்திய அரசு இப்பரிந்துரைகளை ஏற்காவிட்டாலும், மாநில சுயாட்சிக்காக‌ குழு அமைத்த முதல் மாநிலம் தமிழகம். ராஜமன்னார் குழுவின் பரிந்துரைகள் நாடு முழுவதும் விவாதிக்கப்பட்டது. இன்றும் விவாதிக்கபடுகிறது!


பதிவு 6

69% இட ஒதுக்கீடு ( சமூக நீதி):

உச்ச நீதிமன்றம் 16.11.1992 அன்று வழங்கிய தீர்ப்பில், மொத்த இட ஒதுக்கீட்டின் அளவு 50 விழுக்காட்டினை விஞ்சக் கூடாது என்று ஆணையிட்டது. சென்னை உயர்நீதிமன்றம் இதனை நடைமுறைபடுத்தம்படி அரசுக்கு உத்தரவிட்டது.

அன்றைய முதல்வர் செல்வி ஜெயலலிதா  பலருடன் சட்ட ஆலோசனை  நடத்தி 69 % இட ஒதுக்கீட்டை நிலைநிறுத்த 31.12.1993 அன்று சட்ட முன்வடிவை நிறைவேற்றி, குடியரசு தலைவரின் ஒப்புதலை பெற்று சட்டமாக்கினார். (தமிழ்நாடு சட்டம் 45/1994 Tamilnadu Act 45/1994)

இந்திய துணை கண்டத்தில் 69% இட ஒதுக்கீட்டை நடைமுறை படுத்தும் ஒரே மாநிலம் தமிழகம்!

பின்னூட்டம்:

ஜெயலலிதா இதனை மனமுவந்து செய்தாரா என்று இயல்பாக ஒரு கேள்வி எழலாம். மனமுவந்து, உத்வேகத்தோடு , தொலைநோக்குடனே செய்து முடித்தார்!தீர்மானம் நிறைவேற்றியவுடன், அனைத்து கட்சி பிரதிநிதிகளோடு அன்றைய பிரதமர் நரசிம்மராவ் அவர்களை நேரில் சந்தித்து, நிர்பந்தித்து குடியரசு தலைவரின் ஒப்புதலை பெற்றார். மேலும் எதிர்காலத்தில்  69% இடஒதுக்கீடிற்கு எந்த சவாலும் நேராத வகையில்  இந்திய அரசியலமைப்பு சட்டம் விவர அட்டவணை 9 (schedule 9) இல் இடம்பெற செய்தார். இதனாலேயே 69% ஒதுக்கீட்டுக்கு எதிரான எந்த வழக்கும் தள்ளுபடி செய்யப்படுகிறது!


பதிவு 7

மாநில முதலமைச்சருக்கு கொடியேற்றும் உரிமை ( சுயமரியாதை: முன்னோடி மாநிலம்)

1974 இல் சுதந்திர தினத்தன்று தேசியக்கொடி ஏற்றும் உரிமையை மாநில முதலமைச்சர்க்கு வழங்குவதே கூட்டாட்சி தத்துவத்திற்கு (Federalism) உகந்தது என்று அன்றைய பிரதமர் இந்திரா காந்தியிடம் வலியுறுத்தி கடிதம் எழுதினார் கலைஞர். பிரதமரின் ஒப்புதலையும் பெற்றார். 
ஆகத்து 15 1974  முதலே சுதந்திர தினத்தன்று தேசியக்கொடியை முதல்வர்கள் ஏற்றும் வழக்கம் எல்லா மாநிலங்களிலும் பின்பற்றப்படுகிறது.


பதிவு 8

ஆசியாவின் முதல் கால்நடை மருத்துவ அறிவியல் பல்கலைக்கழகம் (முன்னோடி மாநிலம்)

செப் 20 1989 அன்று, அன்றைய முதல்வர் கலைஞர் கருணாநிதி, தமிழ்நாடு கால்நடை மருத்தவ அறிவியல் பல்கலைகழகத்தை (Tamilnadu Veterinary and Animal Sciences University) நிறுவினார். 
ஆசியாவிலேயே கால்நடை மருத்துவ அறிவியலுக்கான முதல் பல்கலைக்கழகம் தமிழகத்தில் நிறுவப்பெற்றது!


பதிவு 9

மொழி உரிமையை நிலைநாட்டிய ஒரே மாநிலம் (சுயமரியாதை, மொழிப்பற்று)

1976 அலுவல் மொழி  விதியில் (Official Languages Rules,. 1976) அனைத்து மாநிலங்களிலும் உள்ள மத்திய அரசு துறைகளுக்கிடையே ஆன தகவல் பரிமாற்றம் ஆங்கிலம் மற்றும் இந்தியில் தான் இருக்கவேண்டும் என்று விதிக்கப்பட்டது. தேவைப்பட்டால் மூன்றாவது மொழியும் சேர்த்துக்கொள்ளலாம் என்ற சலுகை வழங்கபட்டது.தமிழ்நாட்டிற்கு மட்டும் இதிலிருந்து விலக்களிக்கப்பட்டது! (தகவல் பரிமாற்ற மொழிகள் தமிழ் மற்றும் ஆங்கிலம் மட்டுமே)...1. Short title, extent and commencement-
        ii. They shall extend to the whole of India, except the State of Tamilnadu....
        i. These rules may be called the Official Languages (Use for Official Purposes of the Union) Rules, 1976.


பின்னூட்டம்:
இந்த விதிகள் நடைமுறைக்கு வந்தபோது நெருக்கடி நிலை அமலில் இருந்தது!   தி.மு.க தலைவர் கலைஞர் மற்றும் தி.க தலைவர் மணியம்மை தவிர, கட்சி நிர்வாகிகள், தொண்டர்கள் அனைவரும் சிறையில் இருந்தனர். இருந்தும் 1960 களில் நடந்த இந்தி திணிப்பு எதிர்ப்புப் போராட்டங்களின் வீரியமே அன்றைய மத்திய அரசினை தமிழகத்திற்கு மட்டும் விலக்களிக்க நிர்பந்தித்தது


பதிவு 10

பெண்களுக்கு வாக்குரிமை அளித்த முதல் மாநிலம் (சமூக நீதி- பெண்ணுரிமை)

நவ 20  1920 இல் நீதிக்கட்சி தேர்தலில் வென்று தமிழகத்தில் ( Madras Presidency) அ. சுப்பராயலு ரெட்டி தலைமையில் ஆட்சி அமைத்தது. 1921 மே மாதத்தில் பெண்களுக்கு வாக்குரிமை அளிக்கும் தீர்மானம் (Women's Suffrage Resolution)  இந்தியாவில் முதல்முறையாக நிறைவேற்றப்பட்டது! 1927 இல் Dr. முத்துலட்சுமி ரெட்டி பிரிட்டிஷ் இந்தியாவின் முதல் பெண் சட்டபேரவை (Madras Presidency) உறுப்பினர் ஆனார்.https://www.thehindu.com/news/cities/chennai/when-madras-women-won-the-vote/article6969753.ece

பதிவு 11

கல்வியில் முதன்மை மாநிலம் (முன்னோடி மாநிலம்)

இந்தியாவின்
1. சிறந்த நூறு பொறியியல் கல்லூரிகள்- 20 தமிழகத்தில் மட்டும். (IIT Madras- முதலிடம்)
2. சிறந்த 100 பல்கலைக்கழகங்கள்- 15 தமிழகத்தில் மட்டும்
3. சிறந்த 100 கலை அறிவியல் கல்லூரிகள்- 38 தமிழகத்தில் மட்டும்(முதல் பத்தில் 4 தமிழகத்திலிருந்து)


பதிவு 12

அணைத்து சாதியினரும் அர்ச்சகர்( சுயமரியாதை, சமூக நீதி)

2006ம் ஆண்டு திமுக ஆட்சிக் காலத்தில் அனைத்து சாதியினரும் அர்ச்சகராகலாம் என்ற அரசாணை பிறப்பிக்கப்பட்டது. 207 பேருக்கு பயிற்சியும் அளிக்கப்பட்டது.
தடைகளை கடந்து 2017ம் ஆண்டு அதிமுக ஆட்சியில்மாரிச்சாமி என்பவர் இந்து அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் உள்ள, அழகர் கோவிலுக்குட்பட்ட ஐயப்பன் கோயிலில், அர்ச்சகராக நியமிக்கப்பட்டார்
https://www.thehindu.com/news/national/tamil-nadu/tamil-nadus-first-government-trained-non-brahmin-priest-and-his-god-moment/article24604596.ece

திரும்பிப்பார் நிமிர்ந்து நில் -பகுதிII

https://www.kavivenkatesan.com/2018/11/ii.html?m=1

Comments

  1. நல்ல வேளை திராவிடம் என்று சொல்ல வில்லை

    ReplyDelete

Post a Comment

Popular posts from this blog

The Path to Keezhadi - An Archeological Marvel

MySchoolMemoirs: The Sweet Souvenir