திரும்பிப்பார், நிமிர்ந்து நில்! - பகுதி II

பதிவு 1

பெரியாருக்கு யுனெஸ்கோவின் பாராட்டு:

ஜூன் 27 1970ம் ஆண்டு ஐ.நா வின் நிறுவனமான (இந்திய பிரதிநிதி) யுனெஸ்கோ மன்றம் பெரியாருக்கு கீழ்க்கண்டவாறு பாராட்டு தெரிவித்தது
(மொழிபெயர்ப்பு)
"பெரியார்,
புதுயகத்தின் பிதாமகன்,
தென்கிழக்கு ஆசியாவின் சாக்ரடீஸ்,
சமூக சீர்திருத்த இயக்கத்தின் தந்தை,
அறியாமை, மூடநம்பிக்கை மற்றும் அர்த்தமற்ற பழக்க வழக்கங்களின் பரம எதிரி!"

The UNESCO Manram, an Indian representative of international organisation of the United Nations, conferred on Periyar a glorious title the citation of which reads as "Periyar the prophet of New Age, Socrates of South East Asia, Father of the social Reform Movement, and Arch enemy of ignorance, superstitions, meaningless customs and base manners"
- UNESCO 27-6-1970



பதிவு 2

அனைவருக்கும் மருத்துவக்கல்வி (சமூகநீதி):

சமக்கிருத தேர்ச்சி பெற்றவர்களே மருத்துவக்கல்லூரியில் சேர தகுதியானவர் என்ற அவலம் தமிழகத்தில் இருந்தது!  (100% இட ஒதுக்கீடு!)
1920 இல் நீதிக்கட்சி ஆட்சி அமைத்தவுடன் மருத்துவக்கல்விக்கு சமக்கிருத தேர்ச்சி தேவையில்லை என்ற ஆணை பிறப்பித்தது.

இதுவே கல்வியில்
அயல் மொழி ஆதிக்கத்திற்கு எதிராக பாய்ந்த முதல் அம்பு!
அடைத்த கதவுகளை அனைவருக்கும்
அகலத்திறந்த பேரன்பு!



பதிவு 3

தொழில் வளர்ச்சியில் முன்னிலை (முன்னணி மாநிலம்):

தொழிற்சாலைகளின் எண்ணிக்கை (2013- 14 கணக்கெடுப்பு)

1. தமிழ்நாடு - 37,378
2. மகாராட்டிரம்-29,123
3. குஜராத்-22,876

ரிசர்வ் வங்கியின் 2016-17 அறிக்கையிலும் தமிழ்நாடு முதலிடம் வகிக்கிறது.


பதிவு 4

பொதுவிநியோகத் திட்டம்(Universal PDS)- (சமூகநீதி)

1972 ஆம் ஆண்டு அன்றைய முதல்வர் கலைஞர், தமிழ்நாடு நுகர்ப்பொருள் வாணிபக் கழகம் தொடங்கி, அனைவருக்குமான பொதுவிநியோகத் திட்டத்தை செயல்படுத்தினார்.
25 ஆண்டுகள் கழித்து, 1997 இல் மத்திய அரசு, இலக்கு நிர்ணயம் செய்யபட்டோருக்கு மட்டுமான விநியோக திட்டத்தை (Targeted PDS) துவக்கியது

அனைவருக்குமான பொதுவிநியோகத் திட்டத்தை செயல்படுத்தும் ஒரே மாநிலம் தமிழகம். இதன் பரவலான வெற்றி முன்னுதாரணமாக திகழ்கிறது


பதிவு 5

தீண்டாமை விலக்கு மாநாடு ( சமூகநீதி):

1929 ஆம் ஆண்டு பிப்பிரவரி 10, சென்னையில் தீண்டாமை விலக்கு மாநாடு நடத்தினார் தந்தை பெரியார்.

இதுவே இந்தியாவின் முதல் தீண்டாமை ஒழிப்பு மாநாடு!

பதிவு 6

மொத்த உள்நாட்டு உற்பத்தியில் (GDP) முன்னிலை

மொத்த உள்நாட்டு உற்பத்தியில் தமிழகம் இந்தியாவின் முன்னிலை மாநிலமாக உள்ளது.

1. மகாராஷ்டிரா - $430 பில்லியன்
2. தமிழ்நாடு.       - $256 பில்லியன்
3. குஜராத்.           - $230 பில்லியன்

*பணமதிப்பிழப்பு நடவடிக்கைக்கு பிறகும் 2017 இல் தமிழ்நாடு மொத்த உற்பத்தி 7.92 % ஆக இருந்தது

பதிவு 7

கைரிக்சாவை ஒழித்த முதல் மாநிலம் தமிழகம் (சமூகநீதி, மனிதநேயம்):


1969 இல் கைரிக்சாவை தடைசெய்து, இலவச சைக்கிள் ரிக்சாக்களை வழங்கினார் அன்றைய முதல்வர் கலைஞர்.

(1952 இல் 'பராசக்தி' இல்  கைரிக்சா ஒழிப்பு குறித்து தான் எழுதிய வசனத்தை 1969 இல் ஆட்சியில் அமர்ந்தவுடன் நடைமுறைபடுத்தினார்)

இந்தியாவில், கைரிக்சாவை ஒழித்த முதல் மாநிலம் தமிழகம்

பதிவு 8

உயர்கல்வி மொத்த சேர்க்கை விகிதத்தில் முதலிடம் ( Gross Enrollment Ratio - Higher Education)

2016-17 மனிதவள மேம்பாட்டு அமைச்சகத்தின் அறிக்கையின்படி,  46.9 % உயர்கல்வி சேர்க்கை விகிதத்துடன் தமிழகம் முதன்மை மாநிலமாக திகழ்கிறது! (ஆண், பெண் சேர்க்கை விகிதம் மற்றும் தாழ்த்தப்பட்டோருக்கான சேர்க்கை விகிதத்திலும் சிறந்து விளங்குகிறது)

தேசிய உயர்கல்வி சேர்க்கை விகித சராசரி 25.2%

பதிவு 9

நகரமயமாக்கலில் முதன்மை மாநிலம்

இந்திய வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சித் துறை அமைச்சகத்தின் (mohua.gov.in) 2011 கணக்கெடுப்பின் படி 48.4 % நகரமயமாக்கலுடன், முக்கிய மாநிலங்களுள், தமிழகம் முதலிடம் வகிக்கிறது

கேரளா 47.7, மகாராஷ்டிரா 45.2

பதிவு 10

தெற்க்காசியாவின் ஆகப்பெரிய நூலகம்

செப் 15 2010, அன்றைய முதல்வர் கலைஞர் கருணாநிதி அண்ணா நூற்றாண்டு நூலகத்தை திறந்து வைத்தார்.

375000 சதுரடி பரப்பளவுடன் தெற்காசியாவின் ஆகப்பெரிய மற்றும் ஆசியாவின் இரண்டாவது பெரிய நூலகமாகவும் திகழ்கிறது

புத்தக கொள்ளளவு: 1200000
புத்தக இருப்பு: 500000

http://www.annacentenarylibrary.org

பதிவு 11

தனிமனித மேம்பாட்டுக் குறியீட்டில் முன்னணி மாநிலம்

இந்தியாவின் பெரு மாநிலங்களுள்  0.6663 தனிமனித மேம்பாட்டுக் குறியீட்டுடன் (Human Development Index) தமிழகம் இரண்டாமிடம் வகிக்கிறது

கேரளம் - 0.712
தமிழகம்- 0.6663
மகாராஷ்டிரா- 0.6659

தேசிய சராசரி- 0.624

திரும்பிப்பார், நிமிர்ந்து நில்! (நூற்றாண்டை கடக்கும் சுயமரியாதை, சமூகநீதி இயக்கம்)- பகுதி II

பதிவு 12

வணக்கத்தின் வரலாறு(சுயமரியாதை)

அந்நிய 'நமஸ்காரம்' அறியாமையோடு ஒலித்துக்கொண்டிருந்தபோது, வணக்கத்தை வணக்கத்துடன் பரப்பியது சுயமரியாதை இயக்கம். (காரைக்குடி தெருக்களில் வணக்கத்தை வழக்கமாக்க  நிதமும் வணக்கம் சொல்லி வணங்கி  அடிவாங்கியதும் வரலாறு)

பெரும்பாலான மாநிலங்கள் தங்கள் தாய்மொழியை மறந்து நமஸ்காரத்தை அறியாமையோடு அரவணைத்துக் கொண்டிருக்கும்போது
வணக்கத்தை வணக்கத்தோடும் சுயமரியாதையோடும் வழக்கமாக்கிய தமிழகம்!

Comments

Popular posts from this blog

MySchoolMemoirs: The Sweet Souvenir

The Path to Keezhadi - An Archeological Marvel